கூகுள் வலைத்தளம் சம்பாதிப்பது எப்படி?

கூகுள் ஒரு தேடல் பொறி. அதாவது நீங்கள் "wikipedia" என்று  தேடினால் உங்களுக்கு "wikipedia" வலைத்தளம் காட்டும். இதற்கு wikipedia எந்த தொகையும் கூகுள் நிறுவனத்திற்கு தரபோவதில்லை. நாம் கட்டும் "இணையதளம் பில்" கூட ஏர்டல், ரிலையன்ஸ் போன்ற இணையதள நிர்வாகிகளுக்கு தான் சென்றடையும்.  பிறகு எப்படி கூகிள் சம்பதிகிறது? 


அதற்கான விடை விளம்பரம் தான். நீங்கள் எதையாவது தேடும் பொது கூகிள் பக்கத்தில் "Sponsered Links " என்று சில இணையதள முகவரியை காணலாம். அந்த முகவரியின் சொந்தகாரர்கள் அந்த  கூகிள் பக்கத்தில்  இடம் பிடிக்க கூகிள் வலைதளத்திற்கு சில தொகை குடுப்பார்கள். இது தான் இவர்களின் வருமானம். இப்போது நீங்கள் ஒரு கடை சொந்தக்காரர் என்று வைத்து கொள்ளுங்கள். உங்கள் கடைக்கு ஒரு இணையதளம் இருக்கும். கூகிள் நிறுவனத்திற்கு சிறு தொகை குடுத்தால் அவர்கள் உங்கள் கடை விளம்பரம் செய்து தருவார்கள். 

அண்ட்ராய்டு இயக்கு தளம் மூலம் கூகிள் லாபம் அடைகிறதா?
அண்ட்ராய்டு ஒரு இலவச இயக்கு தளம். இதன் மூலம் கூகிள் ஒரு பைசா கூட சம்பாதிக்கவில்லை. அவர்களின் ஒரே குறிக்கோள் விளம்பரம் தான். கூகிள் அண்ட்ராய்டு இயக்கு தளத்திற்கு நாமே கேம்ஸ் போன்ற மென்பொருள் தயாரித்து வெளியிடலாம். நாம் தயாரித்த மென்பொருள் "Google Play " அக்கவுண்ட்  வைத்து பதிவேற்றலம். அந்த மென்பொருளில் கூகிள் நிறுவனம் விளம்பரத்தை போரிபார்கள். அந்த விளம்பரம் மூலம் தான் லாபம் ஈட்டுகிறது கூகிள். 

Popular posts from this blog

Free games for 512 MB RAM Android mobile

Vivo Y51 themes download itz

To place call first turn off airplane mode - Micromax