பெண்களை கவரும் ஃபேஷன் மொபைல் போன் - Motorola GLEAM plus
மோட்டோரோலா க்லீம் பிளஸ் (Motorola GLEAM PLUS):
இந்த காலத்தில் அனைத்திலும் ஃபேஷன் பார்கிறார்கள். அதை குறி வைத்து மோட்டோரோலா தயாரித்த புதிய மொபைல் தான் க்லீம் பிளஸ் (GLEAM PLUS). க்லீம் என்றால் பளிச்சென்று மின்னுகிறது என அர்த்தம். இந்த மொபைல்லும் அப்படி வடிவமைக்கபட்டுள்ளது. இந்த மொபைல் போன் ஃபேஷன் மட்டும் குறி வைத்து தயாரிக்கபட்டது. பார்பதற்கு ஒல்லியாக கவர்ச்சியாக இருக்கிறது. இது பிலிப் மாடல் (flip model) அதாவது திறப்பதற்கு மற்றும் மூடுவதற்கு போல் வடிவமைகபட்டது. பொத்தான் முத்து முத்தாக உள்ளத்தால் எஸ்.எம்.எஸ் டைப் பண்ண வசதியா இருக்கு. இந்த மொபைல் வெளிய உள்ள எல்.ஈ.டி ஸ்க்ரீன்ல நேரம், இன்கமிங் கால் போன்றவற்றை பார்க்கலாம்.
க்லீம் பிளஸ் பிற முக்கிய அம்சங்கள்:
- 16 GB வரை வெளி சேமிப்பு, 50 MB அகநிலை சேமிப்பு
- 2 எம்.பி. கேமரா
- 2.8-அங்குல எல்.சி.டி ஸ்க்ரீன்
- எஃப்எம் ரேடியோ
- எண்ணெழுத்து கீபேட்
- ஜிபிஆர்எஸ்
இந்த மொபைல் முழுக்க முழுக்க எளிமையான, மென்மையான மற்றும் ஸ்டைலான வடிவமைப்பு கொண்டது. நிச்சயம் இந்த மொபைல் மற்ற மக்களை திரும்பி பார்க்க வைக்கும். இந்த மொபைல் அதிகபட்ச விலை 5000 ருபாய் இருக்கும் என எதிற்பர்கபடுகிறது.